நாகை, காரைக்கால் உருக்குலைந்தது : போக்குவரத்து முழுவதும் தடை .... மின்சாரமின்றி மக்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாகை, காரைக்கால் உருக்குலைந்தது : போக்குவரத்து முழுவதும் தடை .... மின்சாரமின்றி மக்கள் அவதி

நாகை: கஜா புயல், நாகை - வேதாரண்யம் இடையே கரை கடந்தது. பலத்த மழை, சூறாவளியால் நாகை, காரைக்கால் மாவட்டங்கள் முழுவதும் உருக்குலைந்தது. வங்கக்கடலில் கடந்த 5 நாட்களுக்கு முன் உருவான கஜா புயல் இன்று அதிகாலை கரை கடந்தது.

இதனால் காஜா புயல் கரையை கடந்தபோது 110 கி. மீ. வேகத்தில் காற்று வீசியதால் நாகை, காரைக்கால் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகை மற்றும், வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், வேளாங்கண்ணி, புத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ஆயிரகணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஏராளமான வீடுக் சேதமடைந்தன.
மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

இதனால் வீட்டை விட்டு எங்கும் நகர முடியாதபடி போக்குவரத்து தடைபட்டது. நேற்று இரவு முதல் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மின்சாரமும் தடை செய்யப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, பழையாறு உள்பட பல மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவை ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்தன.

பல படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

பல துணை மின்நிலையங்கள் சேதம் அடைந்தன. நாகை மாவட்டத்தில் இடிபாடுகளை அகற்றி மீண்டும் மின் இணைப்பு கொடுக்க 2 நாள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைக்கால்
இதுபோல கரைக்காலிலும் நேற்று கஜா புயலின் தாண்டவத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் முறிந்தன.

இதனால் காரைக்காலிலும் இன்று போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. டூவீலர்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு வழிநெடுகிலும், மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து கிடக்கிறது.

குடிசை வீடுகளும் ஆயிரகணக்கில் சேதமடைந்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முழுவதும் மின்சாரம் தடைபட்டு உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கஜா புயலையொட்டி நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்ட மீனவர்கள் 4 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. படகுகளை துறைமுகங்களிலும், முகத்துவாரங்களிலும் பாதுகாப்பாக கயிறுகட்டி நிறுத்தி இருந்தனர்.

இந்த படகுகள் புயல் காற்றில் ஒன்றுடன் ஒன்று மோதி நூற்றுகணக்கான படகுகள் உடைந்தன. பல படகுகள் நாகை, வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூரை வீடுகள், தகர கொட்டகைகள் காற்றில் பறந்தன.

சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தது. கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டதால் வீடுகளில் மழை நீர் புகுந்து வீடுகளும் ெவள்ளத்தில் மிதந்தன.

புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது.

.

மூலக்கதை