மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாப் டூ பிளிசிஸ் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
 
கடைசி ஒருநாள் போட்டியில் பாப் டூ பிளிசிஸ் 125 ஓட்டங்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா-அவுஸ்திரேலியா இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி குவின்ஸ்லாந்தில் நாளை நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருடன், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக டூ பிளிசிஸ் அறிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ’வரும் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அது தான் எனது கடைசி தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
 
டூ பிளிசிஸ், இதுவரை 41 டி20 போட்டிகளில் 1,237 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும்.
 
ஏற்கனவே நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில், டூ பிளிசிஸின் இந்த அறிவிப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரிய அடியாகும்.

மூலக்கதை