இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசய ராஜபக்சே கட்சியினர்: நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க வியூகம்!

தினகரன்  தினகரன்
இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசய ராஜபக்சே கட்சியினர்: நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க வியூகம்!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அந்த பதவியை விட்டு நீக்கிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். இதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே கட்சி, மற்றும் எதிர்க்கட்சியினர் சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பது உறுதியானதால், அவரது ஆட்சி நீடிக்காது என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இந்த நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, சபாநாயகரையும், எதிர்க்கட்சியினரையும் சந்தித்து மீண்டும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தும்படி அறிவுரைத்தார். இதையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக இரண்டாவது முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், எதிராக வாக்களிப்போர் யார் என சபாநாயகர் கேட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மேலும் உக்கிரமானதை அடுத்து சபாநாயகர் மீது ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் மிளகாய் பொடியை தூவியும், நற்காளிகளை தூக்கி எரிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது சில உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவையை நடத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து பாதுகாப்புத் படையினருடன் சபாநாயகர் வெளியேறினார்.

மூலக்கதை