புயல் காரணமாக காரைக்காலில் தூர்வாரும் கப்பல் கரைதட்டியது: கப்பலை காண மக்கள் ஆர்வம்

தினகரன்  தினகரன்
புயல் காரணமாக காரைக்காலில் தூர்வாரும் கப்பல் கரைதட்டியது: கப்பலை காண மக்கள் ஆர்வம்

புதுச்சேரி: கஜா புயல் காரணமாக முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் கப்பல் ஒன்று காரைக்கால் வாஞ்சூர் கடற்கரையில் நேற்று இரவு தரைதட்டியது. இது தனியார் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மையில் தொலைவில் விலகி தரைத் தட்டியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தூர்வாரும் மெர்கேட்டர் என்ற கப்பல் புயல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கஜா புயலால் காற்று 110கி.மீ வேகத்தில் வீசியதன் காரணமாக இந்த கப்பல் தரைதட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கப்பலில் 20க்கும்  மேற்பட்ட அதிகாரிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கப்பலில் உள்ள அதிகாரிகளை மீட்டு, கப்பலின் நிலை குறித்து அறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த கப்பலை காண காரைக்காலை பகுதியை சுற்றி உள்ள மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் போடப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதன்காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் வளைந்தும், மரங்கள் வேரோடு முறிந்தும் காணப்பட்டு வருகிறது.

மூலக்கதை