செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது 25 ஆண்டுகளில் சாத்தியம்: நாசா அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது இன்னும் 25 ஆண்டுகளுக்குள் சாத்தியம் என்று நாசா தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ஈசா, இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்தின் தன்மை குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் புதிய தகவல்களை வெளியிட்டு உள்ளனர். நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தை அனுப்பி வைத்து உள்ளனர். இதன் மூலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் வாழ வைக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டு வந்தது.

பூமியில் இருந்து 22.5 கோடி கி.மீ தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை சென்றவடைதற்கு மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். தற்போதுள்ள ராக்கெட் தொழில்நுட்பத்தின்படி செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு 9 மாதங்களாகும். 

பூவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயணிக்கும் போது கண்பார்வை பாதிப்படையவும், எலும்புகள் பாதிப்படையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் காஸ்மிக் கதிர்வீச்சும் அச்சுறுத்தலாக இருக்கும். 

இந்த நிலையில் விரைவாகச் செல்லும் விதத்தில் ராக்கெட்டை உருவாக்க வேண்டியதும் அவசியமானது. இதற்கான பணிகளை தற்போது தொடங்கினால் இன்னும் 25 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை