கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் இரவு முதலே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், போர்கால அடிப்படையில் விரைவாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மூலக்கதை