பொம்மையை திருமணம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திய வாலிபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பொம்மையை திருமணம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திய வாலிபர்!

டோக்கியோவில் வாலிபர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
 
நாம் சாதாரணமாக ஆண்-பெண் திருமணத்தை கேள்விபட்டிருப்போம் தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னர் ஆண் - ஆண், பெண் - பெண், ஆண் - மூன்றாம் பாலினத்தவர் திருமணம் சஜகமாகிவிட்டது. ஆனால் டோக்கியோவை சேர்ந்த வாலிபர் இந்த லிஸ்ட்லையே இல்லாத அளவுக்கு விநோத திருமணத்தை செய்துள்ளார்.
 
டோக்கியோவை சேர்ந்த ஹரிகோ என்ற என்ற வாலிபருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. ஆனாலும் திருமண ஆசை இருந்தது. இதனால் பெண் வடிவிலான ஒரு பொம்மையை காதலித்து வந்தார். இதையே திருமணமும் செய்ய முடிவு செய்தார்.
 
அதன்படி சமீபத்தில் அந்த பொம்மைக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார். இனி நான் சந்தோஷமாக இருப்பேன் என ஹரிகோ மகிழ்ச்சியிடன் பேசினார்.

மூலக்கதை