கஜா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகையில் 17 செ.மீ. மழை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கஜா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகையில் 17 செ.மீ. மழை

சென்னை: கஜா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் 17 செ. மீ. மழை பெய்துள்ளதாகவும், புயல் நாளை அரபிக்கடலுக்கு செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:கஜா தீவிர புயல் நேறறு நள்ளிரவு முதல் கரையை கடக்க தொடங்கியது. இன்று காலை 6 மணி அளவில் இது முழுவதுமாக கரையை கடந்து திண்டுக்கல் அருகில் புயலாக மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக பலமான காற்று 60 முதல் 70 கி. மீ. வேகத்திலும், அவ்வப்போது 80 கி. மீ.

வேகத்திலும் வீசக்கூடும். கனமழை முதல் மிக கன மழை வரை பரவலாக எதிர்பார்க்கலாம். இது மேலும் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட், அரிராமபட்னம் பகுதிகளில் 17 செ. மீ.

மழை பெய்துள்ளது. பேரவூராணி, பட்டுக்கோட்டை 16, நெய்வேலி 14 செ. மீ. , விருத்தாசலம், செங்கல்பட்டு 12 செ. மீ.

மழை அளவும் அதிகப்பட்சமாக பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 செ. மீ. , தாம்பரம் 1 செ. மீ.

மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர், திருப்பூர், மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, தர்மபுரி, சேலம் இந்த இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கலாம். மற்ற இடங்களில மிதமான மழை பெய்யும். புயல் இன்று காலை 7 மணி நிலவரப்படி 23 கி. மீ.

வேகத்தில் நகர்கிறது. அது திண்டுக்கல் மேல் உள்ளது.

அரபிக்கடலில் நாளைக்கு சென்று விடும். இன்றும், நாளையும் மழை இருக்கும்.

அதிகப்பட்சமாக கஜா புயல் காரணமாக அதிகாரப்பட்டினத்தில் 110 கி. மீ. பதிவாகி உள்ளது.

கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்துள்ளது. உள் மாவட்டங்களில் காற்றின் வேகம் இருக்கும்.

சென்னையில் மேகமுட்டம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை