கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் : 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாப பலி... நாகை, வேதாரண்யம் சின்னாபின்னமானது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் : 20க்கும் மேற்பட்டவர்கள் பரிதாப பலி... நாகை, வேதாரண்யம் சின்னாபின்னமானது

நாகை: வங்கக்கடலில் உருவான `கஜா’ புயலின் கண் பகுதி நாகை - வேதாரண்யம் இடையே இன்று அதிகாலை 2. 30 மணிக்கு கரையை கடந்தது. இதனால், பலத்த மழையும், 110 கி. மீ.

வேகத்தில் வீசிய சூறாவளியால் நாகை, காரைக்கால் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. பல்லாயிரம் மரங்களும், 12 ஆயிரம் மின் கம்பங்கள் பயிற்கள் நாசமாகின.

திருவாரூர், தஞ்சை, புதுகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுகை, திருச்சியில் புயலுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

22 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே கடந்த 5 நாட்களுக்கு முன் உருவான `கஜா’ புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கஜா புயல் மெதுவாக நாகையை நோக்கி நகர்ந்து வந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி. மீ.

வேகத்தில் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 10 மணி முதல் வேதாரண்யம் மற்றும் கொள்ளிடம் பகுதியில் லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின் காற்றும் தொடங்கியது.

மதியம் 1. 30 மணி அளவில் நாகை துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தொங்கவிடப்பட்டது. இது புயலின் அதிகபட்ச ஆபத்தை குறிப்பதாகும்.

புயல் நெருங்கி வந்ததால் நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், கடலூர், ராமநாதபுரம் உள்பட 6 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைவரையும் 4 மணிக்குள் வீடுகளுக்கு அனுப்பும்படி அரசு கேட்டுக்கொண்டது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மாலையில் இருந்து கடலோர கிராமங்களில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

நேற்று மாலை 7 மணிக்கு கஜாவின் விளிம்பு பகுதி கரையை தொட்டது.

8 மணியில் இருந்து சூறை காற்றுடன் கஜா தாக்குதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பரவலாக மழையும் கொட்டியது.

இரவு 11. 30 மணி அளவில் கஜா புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டபோதும் அது மெதுவாகவே கரையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மணிக்கு 15 கி. மீ. வேகத்தில் நகர்ந்தது.

ஆனால் இன்று அதிகாலை 12. 30 மணி முதல் 2. 30 மணி வரை நாகை - வேதாரண்யம் இடையே புயலின் கண் பகுதி கரையை கடக்க ெதாடங்கியது. அப்போது, காற்றின் வேகம் 110 கி. மீ.

வேகத்தில் வீசியது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் இந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்தது.

.

மூலக்கதை