பெரியகுளத்தில் கனமழை : வராக நதி, மஞ்சளாறு அணையில் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பெரியகுளத்தில் கனமழை : வராக நதி, மஞ்சளாறு அணையில் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி : பெரியகுளம் வராக நதி மற்றும் மஞ்சளாறு அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுபணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடுகபட்டி, மேல்மங்கலம், குள்ளப்புரம், பெரியகுளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளாறு அணைக்கு வினாடிக்கு 3,400 கனஅடி நீர்வரத்து உள்ளதால் செங்கிப்பட்டி, வத்தலகுண்டு, சிவஞானபுரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை