பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக தொடங்கியது ஒயின் விற்பனை

தினகரன்  தினகரன்
பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக தொடங்கியது ஒயின் விற்பனை

பாரிசில்: பிரான்ஸ் நாட்டில் புதிய ஒயின் விற்பனைக் காலம் கோலாகலமாக தொடங்கி உள்ளது. அந்நாட்டின் தலைநகரான பாரிசில், ஆண்டு தோறும் நடைபெறும் குறுகிய கால ஒயின் தயாரிப்பு நடப்பு ஆண்டிலும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதன் படி நான்கு நாட்கள் மட்டுமே திராட்சைகளை ஊற வைத்து, அதில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒயின் மிகவும் இலகுவாக இருக்கும் என்பதால் ருசித்து குடிக்க பாரிஸ்வாசிகள் ஆர்வத்துடன் கடைகளில் கூடியுள்ளனர். இந்த ஒயினுக்கு பிரான்ஸ் நாட்டை விட ஜப்பானில்தான் வரவேற்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓயின் தயாரிப்பு அதிகம் உள்ளதால் ஜப்பான் மக்கள் அங்கு நிறைந்துள்ளனர்.

மூலக்கதை