ராட்சத ராட்டினத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட சிறுமி! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ராட்சத ராட்டினத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட சிறுமி! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

எக்குவடோர் நாட்டில் ராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர், அந்தரத்தில் இருந்து தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
 
எக்குவடோர் நாட்டில் சிறுவர்கள் விளையாடி மகிழும் ராட்டினத்தில் நேற்று ஒரு சிறுமி ஏறி சவாரி செய்துள்ளார். ராட்டினம் சுற்ற ஆரம்பித்த சில நிமிடங்களில் சிறுமி அமர்ந்திருந்த நாற்காலி இயந்திரக்கோளாறு காரணமாக வெளியில் வந்துள்ளது.
 
பயத்தில் கம்பியில் சிக்கிக்கொண்ட சிறுமி அலற ஆரம்பித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த நபர்களில் ஒருவர், உரிமையாளரிடம் தெரிவிப்பதற்கு முன்னதாகவே ராட்டினத்திலிருந்து அந்த சிறுமி வெளியில் தூக்கி எறியப்பட்டுள்ளார்.
 
இதில் அந்த சிறுமியின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் தற்போது அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

மூலக்கதை