ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்
ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் சிந்து (4வது ரேங்க்), கொரியாவின் சங் ஜி ஹயனை (10வது ரேங்க்) எதிர்த்து விளையாடினார். அனல் பறந்த இப்போட்டியில் சிந்து 24-26, 20-22 என்ற செட்களில் போராடி தோல்வியை தழுவினார். ஏற்கனவே சாய்னா முதல் சுற்றில் தோற்ற நிலையில் சிந்துவும் வெளியேறி இருக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 18-21, 30-29, 21-18 என்ற செட்களில் சக நாட்டவரான பிரன்னாயை கடுமையாக போராடி வெற்றி பெற்று, கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மாவுடன் மோத இருந்த சீன வீரர் சென் லாங்க் காயம் காரணமாக வெளியேறியதால் , சமீர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

மூலக்கதை