கலிபோர்னியா காட்டுத் தீ பலி எண்ணிக்கை 59 ஆனது

தினகரன்  தினகரன்
கலிபோர்னியா காட்டுத் தீ பலி எண்ணிக்கை 59 ஆனது

பாரடைஸ்:  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பாரடைஸ் உள்ளிட்ட நகரங்களில்  கடந்த வாரம் காட்டுத் தீ ஏற்பட்டது. வரலாறு காணாத வகையில் இந்த காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 59 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்ப் பகுதி காட்டுத் தீயில் 56 பேரும், ஊல்சியில் 3 பேரும் பலியாகி உள்ளனர். தீயில் கருகியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பலியானவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், டிஎன்ஏ பரிசோதனை  நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை