இலங்கை அரசியலில் பாரிய நெருக்கடி! ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அரசியலில் பாரிய நெருக்கடி! ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை

அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாய் மதிப்பில் அமெரிக்க டொலரின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது.
 
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
 
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178 ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
 
வரலாற்றில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 178 ரூபாவுக்கும் மேல் அதிகரித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
 
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 174 .1760 ரூபாய். விற்பனை விலை 178.1073 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி ஆரம்பமான கடந்த ஒக்டோர் 26 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 174.4421 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை