கஜா புயல்: 16 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தினமலர்  தினமலர்
கஜா புயல்: 16 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கஜாபுயலை அடுத்து 10மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

16 மாவட்டங்களுக்கு விடுமுறை
கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்ததையடுத்து கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, தேனி ,மதுரை .திருச்சி , அரியலூர், திருப்பூர் .உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருச்சி , விருதுநகர், தூத்துக்குடி, சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ,திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மூலக்கதை