பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு நோட்டீஸ்

தினமலர்  தினமலர்
பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் இடம்பெற்றிருந்த 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியானது. அதில் இந்தியாவில்; பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட, 400 இந்தியர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மோசடி குறித்து விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையின ரும் ஆய்வு நடத்தினர். பின்னர் 400 பேருக்கு கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. , குற்றம் கண்டறியப்பட்டால் அபராதமும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை