தலிபான் தாக்குதல்: 30 போலீசார் பலி

தினமலர்  தினமலர்
தலிபான் தாக்குதல்: 30 போலீசார் பலி

காபூல்:ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 30 போலீசார் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானின், மேற்கு பராஹ் மாகாணத்தில் உள்ள, போலீஸ் சோதனைச் சாவடி மீது, நேற்று முன்தினம்நள்ளிரவில் தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்றனர். இதில், சோதனைச் சாவடியில் இருந்த, 30 போலீசார் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், காஸ்னி மாகாணத்தில், தலிபான் பயங்கரவாதிகள் மீது, விமானப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மூலக்கதை