பூவை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பூவை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா

பூந்தமல்லி: சென்னை அடுத்த பூந்தமல்லி குமணன்சாவடி சித்திபுத்தி ஞானசுந்தர விநாயகர் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி சந்நிதியில் கந்தசஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 8ம் தேதி முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், சத்ரு சம்ஹார திரிசதி தீபாராதனையுடன் விழா தொடங்கியது.

9ம் தேதி மகிஷா சூரசம்ஹாரமும், 10ம் தேதி மகா சூரசம்ஹாரமும், 11ம் தேதி சிங்கமுகா சூரசம்ஹாரமும் நடைபெற்றது. 12ம் தேதி முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி உலாவந்தார்.

நேற்று முன்தினம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

பின்னர் மாலையில் மஹா சூரசம்ஹார நிகழ்ச்சியும், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ேநற்று தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பூந்தமல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை ஞானம், நிர்மலா ஞானம் குடும்பத்தினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

.

மூலக்கதை