103 பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய சுவிஸ் விமானம்!

PARIS TAMIL  PARIS TAMIL
103 பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய சுவிஸ் விமானம்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமான சுவிஸ் ஏர்பஸ் விமானம் ஒன்று நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
 
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து 103 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமாகியுள்ளது சுவிஸ் ஏர்பஸ் விமானம்.
 
சூரிச் விமான நிலையத்தின் 14-வது ஓடுதளம் நோக்கி விமானம் வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென்று ஆளில்லா விமானம் ஒன்று விமானியின் பார்வைக்கு தென்பட்டுள்ளது.
 
சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக விமானத்தை திசை திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் விமான விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக சூரிச் விமான நிலைய அதிகாரிகள் சுவிஸ் விமான போக்குவரத்து அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் பகிர்ந்துள்ளது.
 
குறித்த ஆளில்லா விமானத்தை இயக்கியவர் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை என கூறும் அதிகாரிகள், அது சட்டவிரோதமான செயற்பாடு எனவும், அனுமதி வழங்கப்படாத பகுதியில் ஆளில்லா விமானத்தை இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 முறை இதுபோன்ற ஆளில்லா விமான சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
மேலும், 500 கிராம் எடை கொண்ட ஒரு ஆளில்லா விமானத்தால் பயணிகள் விமானம் ஒன்றை தகர்க்க முடியும் எனவும், எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு உண்டு எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை