நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 11ல் துவக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 11ல் துவக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. இதில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக  டிசம்பர் 11ம் தேதி துவங்குகிறது.    ஜனவரி 8ம் தேதி வரை 20 நாட்கள் நடக்கிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

5  மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி அன்று வெளியாகவுள்ளன. அன்றைய தினத்தில் குளிர்க்கால கூட்டத்தொடரும் தொடங்குகிறது.   தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜ அரசுக்கு எதிராக வந்தால், இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை தீவிரமாக எழுப்பும்.



நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11 முதல் ஜனவரி 8ம் தேதி  வரை நடைபெறும். இக்கூட்டம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.   இந்த கூட்டத் தொடரில் முக்கிய  மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்.   மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம், கம்பெனிகள் சட்ட திருத்தத்துக்கான அவசர சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன.

.

மூலக்கதை