அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் கிராமப்புற தார் சாலை: தனியார் நிறுவனம் பங்களிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் கிராமப்புற தார் சாலை: தனியார் நிறுவனம் பங்களிப்பு

பொன்னேரி;  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் ஜுவாரி சிமென்ட் எனும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் பல்வேறு சமூக நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  இந்நிலையில், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட கரையான்மேடு, பாலமேடு, அம்பேத்கர் நகர், செல்வாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் ₹60 லட்சம் மதிப்பீட்டில் கடந்த சில மாதங்களாக சுமார் 2 கிமீ தூரம் கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

  இப்பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது.

இதையடுத்து நேற்று மாலை இந்த சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்நிறுவன முதுநிலை பொது மேலாளர் (பணிகள்) நாகேந்திர பிரசாத், இந்த சாலையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை உதவி பொது மேலாளர் சகாயம், உதவி மேலாளர் கதிரவன், முன்னாள் அத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் எம்டிஜி. கதிர்வேல், ஊராட்சி செயலர் பொற்கொடி மற்றும் நிறுவன ஊழியர்கள் மற்றும் அக்கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை