அச்சம்:கனமழை அறிவிப்பால் டெல்டா விவசாயிகள்:காப்பீடு அவகாசம்நீட்டிக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
அச்சம்:கனமழை அறிவிப்பால் டெல்டா விவசாயிகள்:காப்பீடு அவகாசம்நீட்டிக்க கோரிக்கை

கனமழை அறிவிப்பால் டெல்டா விவசாயிகள்...காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிக்க கோரிக்கைகாட்டுமன்னார்கோவில்:கஜா புயல் காரணமாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் காவிரி டெல்டா விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலுார் மாவட்டங்களில் 27 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெல், கரும்பு, வாழை மற்றும் தோட்டப்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது அதில் 17 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அதில் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 40ல் இருந்து 50 நாள் பயிராகவும், நாகை, புதுக்கோட்டை, கடலுார் மாவட்ட கடைமடை பகுதிகளில் 35 நாட்கள் முதல் 45 வரையிலான சம்பா பயிர்கள் உள்ளன.தற்போது இரண்டு முறை மேலுரம் மற்றும் அடியுரமிட்டு பயிர்கள் நன்கு வளர்ந்து செழிப்பாக உள்ளது. இந்நிலையி்ல், கடந்த ஒரு வார காலமாக மழை எச்சரிக்கையையடுத்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு தண்ணீர் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.இந்நிலையில், கஜா புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சுமார் 20 செ.மீ., வரை மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது போன்று கன மழை பெய்தால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கும்.வடிகால் மூலம் உடனடியாக தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் என கருதுகின்றனர். இதனால் துார் பருவத்தில் உள்ள சம்பா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து அழுகும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.கடலோர பகுதியான கடலுார் மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அதிக பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தால் மாவட்ட விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.காப்பீடு செய்யாதவிவசாயிகள் தவிப்புகாவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்; கடந்த முறை பயிர் காப்பீடு செய்த 30 சதவீத விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்காததால் விரக்தியில் இருந்த விவசாயிகள் இந்த முறை பயிர் காப்பீடு செய்யாமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.தற்போது புயல் காரணமாக கன மழை பெய்யும் என்பதால் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், கடந்த 4 நாட்களாகவே பயிர் காப்பீடு செய்ய ஒரே சமயத்தில் வருவாய் துறையினரை முற்றுகையிட்டு வருகின்றனர். புயல் ஓய்ந்தாலும் பயிர் காப்பீடு செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை