ஏடிஎம், ஸ்வைப்பிங்கில் கவனம் தேவை டெபிட்கார்டு பயன்படுத்தறீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்கள்...

தினகரன்  தினகரன்
ஏடிஎம், ஸ்வைப்பிங்கில் கவனம் தேவை டெபிட்கார்டு பயன்படுத்தறீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்கள்...

புதிதாக கணக்கு துவக்கி பாஸ்புக் வாங்கியதோடு சரி. பிறகு வங்கிக்கு செல்வதே கிடையாது. பணம் வேண்டுமா? உடனே ஏடிஎம்க்கு செல்ல  வேண்டியதுதான். அங்கே பின் நம்பரை போட்டு பணத்தை எளிதாக எடுக்கலாம். சிலர் இன்னும் டெபிட் கார்டை கடைகளில் பொருள் வாங்கி விட்டு  பணம் செலுத்த பயன்படுத்துகின்றனர்.  பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பயன்பாடு அளவுக்கு ஏடிஎம் மோசடிகளும் நாளுக்கு நாள் வெளிவருகின்றன. ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ரகசிய குறியீட்டை  தெரிந்து கொண்டு போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்து விடுகின்றனர்.பின் நம்பர் போடும்போது பிறருக்கு தெரியாமல் பயன்படுத்துங்கள். ஏடிஎம்மில் உடன் யாரையும் அனுமதிக்க வேண்டாம். வெளியில் இருப்பவர்களும்  பார்க்காத வகையில் உடலால் பின் நம்பர் அழுத்தும் போர்டை மறைத்து நின்று பயன்படுத்தவும். டெபிட் கார்டுகளில் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணத்தை பரிமாற்றம் செய்து விடுகின்றனர். இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான்  மேற்கொள்ளப்படுகிறது. ரூபே கார்டுகள் வெளிநாடுகளில் பயன்படுத்த முடியாதவை. மாஸ்டர், விசா கார்டாக இருந்தாலும் வெளிநாடுகளில்  பயன்படுத்தும் வசதியை நிறுத்தி வைக்கும்படி வங்கியில் கோரலாம். சில வங்கிகள் இத்தகைய வசதியை அளிக்கின்றன.வங்கியில் இருந்து பேசுவதாக யார் கூறினாலும் டெபிட் கார்டு எண், ரகசிய குறியீடு, கார்டு காலாவதி தேதி போன்றவற்றை கூற வேண்டாம்.  வங்கிகள் ஒரு போதும் இவற்றை கேட்பதில்லை. இத்தகைய அழைப்புகள் வந்தால் உடனடியாக வங்கிகளில் புகார் செய்யவும். ரிசர்வ் வங்கிக்கும் புகார்  அனுப்பலாம். ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது மிக எளிது. ஆனால் மோசடி மலிந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் எச்சரிக்கை  மிகவும் அவசியம்.இதுபோல் டெபிட்கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பணம் செலுத்திய பிறகு மொபைல் நம்பருக்கு  குறுந்தகவல் வருகிறதா என பார்க்கவும். அதன்பிறகும் வங்கியில் இருந்து வரும் குறுந்தகவல்களை கவனிக்கவும். உங்களுக்கு தெரியாமல் பணம்  பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.இதை தவிர்க்க, ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு செருகும் இடத்தில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளா என்பதை பார்க்க வேண்டும். இது  முடியாவிட்டால், பரபரப்பான சாலைகளில், எந்த நேரமும் காவலாளி இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். ஸ்கிம்மர் பொருத்துபவர்கள் இத்தகைய  ஏடிஎம்களில் வேலை காட்டுவதில்லை.

மூலக்கதை