சில்லி பாய்ண்ட்

தினகரன்  தினகரன்
சில்லி பாய்ண்ட்

* ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உட்பட 22 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.* ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீரர் கிடாம்பி காந்த் தகுதி பெற்றனர். நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யாமகுச்சியிடம் போராடி தோற்றார்.* 10வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அனுபவ வீராங்கனை மேரி கோம் 6வது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார்.* ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி... விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா இல்லாத இந்திய அணியைப் போன்றது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.* இந்திய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சவாலானதாக இருக்கும் என்று முன்னாள் வேகம் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.* உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷியா சென் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் தோல்வியைத் தழுவினார்.* புரோ கபடி லீக் தொடரில் அரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகளிடையே நடந்த விறுவிறுப்பான ஆட்டம் 32-32 என்ற புள்ளிக் கணக்கில் சரிசமனில் (டை) முடிந்தது.

மூலக்கதை