சபரிமலை விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு கேரளாவில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: தந்திரி, பந்தளம் குடும்பம் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலை விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு கேரளாவில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: தந்திரி, பந்தளம் குடும்பம் பங்கேற்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று பிற்பகல் மாலை 3 மணியளவில்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 22ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என தெரிவித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்று தான் கேரள அரசு கருதியது. ஆனால் இந்த மனுக்களை தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்மனித்தது கேரள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே, இளம்பெண்களை அனுமதிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

இதனால் தந்திரிகள் குடும்பம், பந்தளம் அரண்மனை குடும்பத்தினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களிடமும் அரசியல் கட்சி மற்றும் மத தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகே உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் முதல்வர் பினராயி விஜயன் அதை ஏற்க மறுத்துவிட்டார். எப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம் என்று அவர் கூறினார்.



இதையடுத்து கேரள அரசை கண்டித்து ஆர்எஸ்எஸ், விஷ்வஇந்து பரிஷத், ஐயப்ப கர்ம சமீதி, ஐயப்ப சேவா சங்கம், நாயர் சமுதாய அமைப்பு உள்பட பல்ேவறு அமைப்புகள் நாம ஜெபபேரணி உள்பட போராட்டங்களை நடத்தின. காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் குதித்தது.

இதற்கிடையே கடந்த ஐப்பசி மாத சபரிமலை நடை திறப்பின்போதும், சித்திரை ஆட்ட திருநாள் பூஜையின்போதும் சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிப்பதை எதிர்த்து வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் மறுசீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து, கேரள அரசு தனது கடும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க தீர்மானித்துள்ளது.  

நாளை காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் வைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இதன்பின்னர் மாலை 3 மணியளவில் நடக்கும் கூட்டத்தில் தந்திரி மற்றும் பந்தளம் அரண்மனை நிர்வாகிகளையும் முதல்வர் பிஜராயி விஜயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் தந்திரி மற்றும் பந்தளம் மற்றும் மன்னர் குடும்பத்தினரை ஆலோசனைக்கு முதல்வர் அழைத்திருந்தார்.

அனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டனர். இந்தநிலையில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தயார் என்று தந்திரி மற்றும் பந்தளம் அரண்மனை குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தங்களது முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பந்தள மன்னர் குடும்ப நிர்வாகி சசிகுமாரவர்மா தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை