ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!

ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது. 
 
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும்  மகளிருக்கான ஐ.சி.சி. இருபதுக்கு -  20 உலக கிண்ணப்போட்டிகளில் இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் களமிறங்கியுள்ளனர். 
 
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்காக 67 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
தென்னாபிரிக்க மகளிர் அணித்தலைவி தனது சக வீராங்கனை மரிசானே கப்பை கடந்த ஜூலை மாதம் திருமணமுடித்தார்.
 
நியூசிலாந்தின் மகளிர் அணியின் தலைவி அமிர் சட்டெர்வெய்த் தனது சக வீராங்கனை டகுகுவை 2017 இல் திருமணம் செய்துள்ளார். 
 
அவுஸ்திரேலிய அணியிலும் ஒருபால் உறவில் ஆர்வம் கொண்ட வீராங்கனைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அவுஸ்திரேலிய அணியின் எலைசை விலானி என்ற வீராங்கனை நிக்கொலே பொல்டனுடன் தனக்கு  ஒருபால் உறவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
 
அவுஸ்திரேலியா ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமானதாக அறிவித்த பின்னர் மற்றொரு வீராங்கனையும் இது குறித்து  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

மூலக்கதை