கஜா புயல் எதிரொலி : நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மானாமதுரையில் இருந்து புறப்படும்

தினகரன்  தினகரன்
கஜா புயல் எதிரொலி : நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மானாமதுரையில் இருந்து புறப்படும்

ராமேஸ்வரம் : நாளை மாலை கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சென்னை, கன்னியாகுமரி, திருப்பதி ரயில்கள் மானாமதுரையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் \'சேது அதிவிரைவு ரயில்\' மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.* 16852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் \'விரைவு ரயில்\' மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.* 16780 ராமேஸ்வரம் - திருப்பதி \'மீனாட்சி விரைவு ரயில்\' மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.* 22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி \'அதிவிரைவு ரயில்\' மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.* நவ 16ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் 16733 ராமேஸ்வரம் - ஓகா விரைவு ரயில், மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை