காசா, இஸ்ரேல் இடையே தற்காலிகமாக சண்டை நிறுத்தம்: எகிப்தின் முயற்சியால் மீண்டும் அமைதி

தினகரன்  தினகரன்
காசா, இஸ்ரேல் இடையே தற்காலிகமாக சண்டை நிறுத்தம்: எகிப்தின் முயற்சியால் மீண்டும் அமைதி

காசா: எகிப்தின் மத்தியஸ்தம் காரணமாக பாலஸ்தீன இயக்கத்தினரும், இஸ்ரேல் படையினரும் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர். இதனால், இத்தனை நாள் காசா எல்லையில் நீடித்து வந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. காசாவில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. மேலும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியதால் காசா எல்லையில் பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து சமாதானம் செய்வதற்கான நடடிக்கையில் எகிப்த் ஈடுபட்டது. இதன் காரணமாக பாலஸ்தீனாவும், இஸ்ரேலும் பரஸ்பரம் தாக்குதலை நிறுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் நிலையில், இஸ்ரேல் மக்கள் சண்டை நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலால் பாதிப்படைந்த கிராம மக்கள் வீதிகளில் டயர்களை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆனால் காசாவில் பாலஸ்தீனியர்கள் இனிப்புகளை பரிமாறி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இந்த ராக்கெட் குண்டுகளால் பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரு நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதோடு, 2 பேர் படுகாயம் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை