காஜலுக்கு முத்தம் ஏன், ஒளிப்பதிவாளர் விளக்கம்

தினமலர்  தினமலர்
காஜலுக்கு முத்தம் ஏன், ஒளிப்பதிவாளர் விளக்கம்

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் திங்களன்று 'கவச்சம்' தெலுங்குத் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு, மேடையிலேயே காஜல் அகர்வாலை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

ஒரு பொது மேடை நிகழ்வில் அவர் அப்படி நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் இசையமைப்பாளர் தமனிடம் சவால் விட்டு முத்தம் கொடுத்தார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சோட்டா கே நாயுடு விளக்கம் கொடுத்துள்ளார்.

“அவர் மீதுள்ள ஈர்ப்பில் அந்த முத்தத்தைக் கொடுக்கவில்லை. மறைந்த நடிகை சௌந்தர்யாவிற்குப் பிறகு நான் நேசிக்கும் ஒரு நடிகை காஜல் அகர்வால். தற்போதுள்ள நடிகைகளில் மிகவும் சிறப்பாக நடிப்பவர் காஜல். ஒரு பாசத்தில்தான் அவருக்கு முத்தம் கொடுத்தேன்,” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை