மீண்டும் மூவர் கூட்டணி : விஜய் 63 அறிவிப்பு

தினமலர்  தினமலர்
மீண்டும் மூவர் கூட்டணி : விஜய் 63 அறிவிப்பு

விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த சர்கார் படம் நல்ல வசூலை கொடுத்து வருகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக்காக விஜய்யும், ரஹ்மானும் இணைந்துள்ளனர். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லீயும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கான எளிய பூஜை காலையில் நடந்தது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என இப்போதே அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது : எங்களின் 20-வது படம் விஜய் தயாரிப்பில் உருவாகிறது. தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் இந்த விஜய் 63 படம், பக்கா மாஸாக, குடும்பங்கள் ரசிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.

ரஹ்மான் இசை, கேஜி விஷ்ணு ஒளிப்பதிவு, கலை முத்துராஜ், படத்தொகுப்பு ரூபன் மற்றும் ஆண்டனி, ஸ்டண்ட் - அனல் அரசு, பாடல்கள் விவேக்.

2019 தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்திருக்கிறது.

மூலக்கதை