ஆர்யாவின் மகாமுனி

தினமலர்  தினமலர்
ஆர்யாவின் மகாமுனி

அருள்நிதி நடித்த மெளன குரு படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார், முதல்படத்திலேயே முத்திரை பதித்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு பிறகு, சாந்தகுமாரின் அடுத்தப்படம் துவங்கப்படாமலே இருந்தது.

இவரது இயக்கத்தில் கார்த்தி, ஜீவா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது, ஆர்யாவை வத்து மகாமுனி என்ற படத்தை துவங்கி விட்டார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மேயாதமான் இந்துஜா ஹீரோயினாக நடிக்கிறார், தமன் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.

மூலக்கதை