தானாக நகர்ந்த பார்சல் பெட்டி! திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

PARIS TAMIL  PARIS TAMIL
தானாக நகர்ந்த பார்சல் பெட்டி! திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மலேசியாவில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்துக்கு வந்த பார்சல் பெட்டி உள்ளே மலைப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Pos Laju என்ற கொரியர் நிறுவனத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் 'football boots என்ற லேபிள் இருந்ததோடு நாட்டின் வடமேற்கில் உள்ள பினாங் மாகாணத்தில் உள்ள மாணவர்கள் ஹாலுக்கு அதை அனுப்ப வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
 
பார்சல் பெட்டியானது தானாக நகர்ந்து கொண்டே இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த ஊழியர்கள் அதை பிரித்து பார்த்தனர்.
 
அப்போது உள்ளே மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
 
இது குறித்து கொரியர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் கொடூரமானது.
 
எங்கள் நிறுவனம் மூலம் அனுப்பப்படும் பார்சலில் எந்த ஒரு விலங்குகள் மற்றும் ஊர்வனத்தையும் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.
 
இதை மீறி இது போன்ற உயிரினங்களை வைத்தால் அந்த பார்சல் அனுப்படமாட்டது என தெரிவித்துள்ளது.
 
இதனிடையில் பார்சலில் இருந்த மலைப்பாம்பின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
 
 

Postage Ular 😵😵😵

Bahaya seller dengan buyer ni.

Pos Malaysia pic.twitter.com/jMYVL3uelq

— AkuTweetFakta (@AkuTweetFakta) November 12, 2018

மூலக்கதை