ஜோதிகா படத்தை பார்க்க ஏற்பாடு செய்த கல்லூரி

தினமலர்  தினமலர்
ஜோதிகா படத்தை பார்க்க ஏற்பாடு செய்த கல்லூரி

திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு கழித்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கதைகளில் நடித்தார். அவர் நடிக்கும் படங்களுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது அவர் ராதாமோகன் இயக்கத்தில் நடித்துள்ள காற்றின்மொழி படம் நவம்பர் 16-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை நெய்வேலியில் உள்ள நேஷ்னல் கல்லூரி மாணவிகள் முதல் நாளில் படத்தை பார்க்க அந்த கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு செய்துள்ளது.

ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர்மட்டும் படங்கள் பெண்களுக்கு நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும் கதையில் இருந்தது. அதனால் இந்த காற்றின் மொழி படமும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்கின்றனர் மாணவிகள்.

மூலக்கதை