2.0 படத்திற்கு யு/ஏ சான்று

தினமலர்  தினமலர்
2.0 படத்திற்கு யு/ஏ சான்று

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள மூன்றாவது படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இந்த படத்தில் ரஜினியுடன், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் மேக்கிங் வீடியோ, டீசர், டிரைலர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளனர். இந்தியா சினிமாவே வியக்கும் வகையில் ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாகிறது.

இந்தபடத்தை தணிக்கைகுழு பார்வையிட்டு, யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார். இதை லைகா நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை