உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு! இன்றுடன் முடிவுக்கு வரும் மஹிந்தவின் பிரதமர் கனவு

PARIS TAMIL  PARIS TAMIL
உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு! இன்றுடன் முடிவுக்கு வரும் மஹிந்தவின் பிரதமர் கனவு

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற வளாகத்தில் தற்சமயம் பெற்று வரும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.
 
இன்றைய தினம் மாத்திரம் பிரதமர் ஆசனத்தில் அமர மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வர்த்தகமானிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக சபாநாயககர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கமைய இன்றைய தினம் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சில சந்தர்ப்பங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதற்காக சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதாக இந்த கூட்டத்தின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று அறிவிப்பு விடுத்தார்.
 
இந்த் நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பொலிஸார், கலக தடுப்பு குழுவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால் நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.
 

மூலக்கதை