நிறுத்தம்!

தினமலர்  தினமலர்

 கால்நடை துறை மூலம் மாடுகளுக்கு வழங்கும் தீவனம்... அரசு நிதி ஒதுக்கீடு இல்லை என அதிகாரிகள் கைவிரிப்புதிருத்தணி:கால்நடை துறையின் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளின் மாடுகளுக்கு பசுத்தீவனம், பயிரிட இலவசமாக விதைகள் மற்றும் புல்கரணைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில், அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாடுகளுக்கு தீவனம் வழங்க முடியாது என, அதிகாரிகள் கைவிரித்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.திருத்தணி கோட்டத்தில், 75 ஆயிரம் விவசாயிகள், மொத்தம், 84 ஆயிரம் கால்நடைகள், 1.50 லட்சம் ஆடுகள் மற்றும் 3 லட்சம் கோழிகள் வளர்த்து வருகின்றனர். இவைகளுக்கு, சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக கோட்டத்தில், 23 கால்நடை மருந்தகங்கள், இரண்டு கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மருத்துவர்கள், ஆய்வாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகள் நலன் கருதி, மாடுகளுக்கு தீவனமாக, கோ - 4, சோளம், மக்காசோளம், பசுத்தீவனம், அகத்தி போன்ற விதைகள் விவசாயிகளுக்கு, அரசு இலவசமாக வழங்கி வருகிறது.இவற்றை பயிரிட்டு, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.மேலும், புல்கரணைகளை வாங்கி நட்டு பயிரிட்டால், அரசு மானியம் கால்நடை துறையின் மூலம், வழங்கப்படும்.இதற்காக கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்று, பயனாளிகளை தேர்வு செய்து அரசு வழங்கும் பசுத்தீவனம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவர்.மேலும், உலர்தீவனமான வைக்கோல் கொள்முதல் செய்து, 1 கிலோ, 2 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. காரணம், போதிய மழை இல்லாததால் கால்நடைகளுக்கு தீவனம் கால்நடை துறையின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்ததால், விவசாயிகளும் ஆர்வத்துடன் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.இந்நிலையில், நடப்பாண்டில் மேற்கண்ட தீவனங்கள் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. காரணம், அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், கால்நடை துறையின் மூலம் வழக்கம் போல் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வழக்கம் போல் பசுத்தீவனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.ஆண்டுதோறும், செப்டம்பர் மாதம் இறுதிக்குள் கால்நடைகளுக்கு அரசால் வழங்கப்படும் தீவனங்கள், அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும். நடப்பாண்டில் அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஆனதால், குறித்த நேரத்தில் தீவனங்களை பயிரிடுவதற்கு விதைகள் கொடுக்கவில்லை. புல்கரணைகள் மட்டும் விவசாயிகள், பிறரிடம் இருந்து வாங்கி வந்து பயிரிட்டு, புகைப்படத்துடன் ஆதாரம் காட்டினால், அவர்களது வங்கி கணக்கிற்கு, 2,500 ரூபாய் அரசு மானியம் அனுப்பி வைக்கப்படும்.கால்நடை துறை அதிகாரி, திருவள்ளூர்ஆரம்ப காலத்தில் நன்றாக மழை பெய்ததால், நெற்பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வைக்கோல் மற்றும் பச்சை புல் சேகரித்து மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை இல்லாததால் பயிரிட முடியவில்லை. மேலும் வயல்வெளியில் புல்லும் முளைக்காததால் கால்நடை துறையின் மூலம் வழங்கும் தீவனங்களை பயன்படுத்தி வந்தேன். நடப்பாண்டில் இதுவரை தீவனம் வழங்காததால் கால்நடைகளை வளர்ப்பதற்கு கடும் சிரமப்படுகிறேன்.பி.ஜி.லோகநாதன், ராமகிருஷ்ணாபுரம்

மூலக்கதை