ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி

தினகரன்  தினகரன்
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி

லண்டன்: ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் கஸ்டவோ குயர்டன் பிரிவு லீக் ஆட்டத்தில், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை வீழ்த்தினார். லண்டன் O2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதி வருகின்றனர். குயர்டன் பிரிவில் இடம்பெற்றுள்ள நம்பர் 1 வீரர் ஜோகோவிச் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஐஸ்னரை எதிர்கொண்டார்.தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 7-6 (7-5), 7-6 (7-1) என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தினார்.

மூலக்கதை