பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணம்

சிங்கப்பூர்:  சிங்கப்பூரில் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு மற்றும் பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்றும், நாளையும் அங்கு இருக்கிறார். இந்த பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்கும் பிரதமர் நரேந்திரமோடி இரு நாட்டுக்கிடையே உள்ள உறவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கின்றார். ஆசியான்-இந்தியா மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.மேலும் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் பிற நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ள பிரதமர் நரேந்திரமோடி இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் ஆலோசிக்க உள்ளார். மாநாட்டின் இடையே இன்று அமெரிக்க துணை அதிபர் பென்சை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி சிங்கப்பூரில் நடைபெறும் பின்டெக் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்திய தலைவர் இந்த விழாவில் உரையாற்றுவது இதுதான் முதல் முறையாகும்.

மூலக்கதை