கலிபோர்னியா காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கலிபோர்னியா காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

பாரடைஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பாரடைஸ் பகுதி வனப்பகுதியில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ, காற்றின் வேகத்தினால் தொடர்ந்து பரவி வருகிறது. காட்டுத்தீ மற்றும் அதனால் ஏற்படும் புகை காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கார்களில் பயணம் செய்தவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என பலர் காட்டுதீ புகை மற்றும் தீயினால் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதுவரை காட்டுத்தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. 4 நாட்களாக எரிந்து வரும் காட்டு தீயினால் நகரில் இருந்து சுமார் 27,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். 7,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. மாயமானவர்களை உறவினர்கள் மருத்துவமனைகளிலும், காவல்நிலையங்களிலும், முகாம்களிலும், நண்பர்கள் வீடுகளிலும் தேடி வருகின்றனர். சுமார் 8000 தீயணைப்பு துறை வீரர்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை