மோடிக்கு எதிரான வழக்கு: 19-ல் விசாரணை

தினமலர்  தினமலர்
மோடிக்கு எதிரான வழக்கு: 19ல் விசாரணை

புதுடில்லி: கடந்த, 2002ல், குஜராத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில்வே ஸ்டேஷனில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சில பெட்டிகள், வன்முறையாளர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன. 59 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கலவரம் பரவியது.


ஆமதாபாத் நகரில், குல்பர்க் சொசைட்டி எனப்படும் குடியிருப்பு பகுதியில், வன்முறை கும்பல், கொலை வெறி தாக்குதல் நடத்தி, 69 பேரை கொன்றது. இதில், அப்போதைய, காங்., - எம்.பி., இஷான் ஜாப்ரியும் ஒருவர்.இஷான் ஜாப்ரியை, வன்முறை கும்பல், வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு கொன்று, உடலை தீயிட்டு எரித்ததாகவும், இந்த விவகாரத்தில், போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. .
இந்த வழக்கு தொடர்பாக, 2012ல், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தீவிர விசாரணைக்கு பின், 'நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை' என, அறிக்கை தாக்கல் செய்தது.இதை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஸகியா ஜாப்ரி, 2014ல், மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்து உள்ளார்.இந்நிலையில், ஸகியா ஜாப்ரியின் மேல் முறையீட்டு மனுவை, 19ல் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மூலக்கதை