கண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு

தினமலர்  தினமலர்
கண்காணிப்பு குழு வாட்ஸ் ஆப் அறிவிப்பு

புதுடில்லி: நாட்டில், சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தியால், அப்பாவி பொதுமக்கள், 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.இதன்பின், 'வாட்ஸ் ஆப்'பில் தவறான தகவல் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' தகவல்களை சரிபார்க்கவும், கண்காணிக்கவும், சர்வதேச அளவில், 20 குழுக்களை அமைத்து, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது.இந்தியாவில், 'வாட்ஸ் ஆப்' செய்திகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், பெங்களூரைச் சேர்ந்த, அனுஷி அகர்வால், நிஹல் பஸ்சன்ஹா ஆகியோரும், 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ்' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, சகுந்தலா பனாஜி, மாறா, ராம்நாத் பட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இது போல அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களில், இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை