சரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு

தினகரன்  தினகரன்
சரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு

மும்பை: திங்கள் கிழமை ரூபாய் மதிப்பு 39 பைசா சரிந்த நிலையில் காணப்பட்டது. நேற்று 29 பைசா டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மீண்டுள்ளது. நேற்று ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.72.89 என இருந்தது. வர்த்தக முடிவில் ரூ.72.67 ஆனது.   கடந்த சில நாளாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடுமையாக சரிந்து பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் நிதி மாற்றங்கள் இதற்கு காரணம் என்றாலும், இதன் விளைவாக வெளிநாட்டு  முதலீடுகள் சரிய ஆரம்பித்தன. இப்போது ஓரளவு மீண்டு வருவதால் மீண்டும் அன்னிய முதலீடு லேசாக வர ஆரம்பித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு, சில நாடுகளின் கரன்சிக்களுக்கு எதிராக லேசாக சரிய ஆரம்பித்துள்ளதால், வெளிநாட்டு முதலீடு வர ஆரம்பித்துள்ளது மட்டுமின்றி, இந்தியாவிலும் முதலீடுகள் பெருக ஆரம்பித்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்றாலும், தொடர்ந்து இந்த நிலை நீடிக்குமா என்பதே கேள்விக்குறி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை