மம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம்

தினமலர்  தினமலர்
மம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம்

புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க நாயுடு பல எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் டில்லி சென்ற அவர் ராகுல், யெச்சூரி , முலாயம்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினார். சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

இந்நிலையில் வரும் 19ம் தேதி சந்திரபாபு நாயுடு மேற்குவங்கம் செல்கிறார். அவர் மம்தாவை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார்.

மூலக்கதை