மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகபெரும் தேடுதல் வேட்டை! - 81 ஆயுதங்கள் மீட்பு! - 22 பேர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகபெரும் தேடுதல் வேட்டை!  81 ஆயுதங்கள் மீட்பு!  22 பேர் கைது!!

நவம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதி மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகப்பெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 81 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
 
கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கை, பல்வேறு கண்காணிப்பு மற்றும் பின் தொடர்தலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர்கள் ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத முனையில் கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். நவம்பர் 6 ஆம் திகதி, மார்செயில் 19 பேர் கைது செய்யப்பட்டதோடு, 66 ஆயுதங்களும், €34,000 ரொக்கபணமும் மீட்கப்பட்டுள்ளது. 
 
மறுநாள் நவம்பர் 7 ஆம் திகதி, மூன்று நபர்கள் La Seyne-sur-Mer (Var) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, 15 ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலக்கதை