வான்வெளியில் தோன்றிய அடையாளம் தெரியாத பொருளினால் பதற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
வான்வெளியில் தோன்றிய அடையாளம் தெரியாத பொருளினால் பதற்றம்!

அயர்லந்து வான்வெளியில் அடையாளம் தெரியாத பொருள்களைக் கண்டதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.
 
அயர்லந்தின் தென்மேற்குக் கடற்கரைக்கு அப்பால், வான்வெளியில் ஒளிமயமான விளக்குகளையும் பார்த்ததாக பிரிட்டிஷ் விமானி ஒருவர் கூறினார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) அயர்லந்து நேரப்படி காலை மணி 6:47க்கு அடையாளம் தெரியாத பொருளொன்று வேகமாய்க் கடந்துசென்றதாக அவர் சொன்னார்.
 
அதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட விமானி, இராணுவப் பயிற்சி ஏதும் நடக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.
 
ஆனால் அந்த நேரத்தில் எந்தப் பயிற்சியும் இடம்பெறவில்லை.
 
வெர்ஜின் விமானத்தின் விமானியும் அது பற்றிக் கருத்துரைத்தார். அது எரிகல்லாக இருக்கலாம் என்றார் அந்த விமானி.
 
விமானிகளின் புகார்களைத் தொடர்ந்து அயர்லந்து விமானப்போக்குவரத்து ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

மூலக்கதை