உயிர் ஆபத்தில் 11 மில்லியன் குழந்தைகள்! வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
உயிர் ஆபத்தில் 11 மில்லியன் குழந்தைகள்! வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

உலகெங்கும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 11 மில்லியன் குழந்தைகள், 2030ஆம் ஆண்டிற்குள், நிமோனியா காய்ச்சலுக்குப் பலியாகக்கூடும் என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
சிறு குழந்தைகளிடையே மரணம் விளைவிக்கும் இரண்டாவது ஆகப்
பெரிய கிருமித்தொற்றாக நிமோனியா கருதப்படுகிறது.
 
அதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நாளாக இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.
 
நிமோனியாவால் நுரையீரல் பாதிக்கப்படும் போக்கு, வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியவர்களிடம் காணப்படுகிறது.
 
வளரும் நாடுகளில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் மாண்டுபோக அது காரணமாகிறது.
 
2016ஆம் ஆண்டில் 2 வயதுக்குக் குறைவான 880 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகள் நிமோனியாவால் மாண்டனர்.
 
அடுத்த பத்தாண்டில் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு ஆகியவற்றில் பல்லாயிரம் குழந்தைகள் ஆபத்தை எதிர்நோக்குவதாக அண்மை ஆய்வு குறிப்பிடுகிறது. 

மூலக்கதை