அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டி?

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டி?

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி துளசி கபார்ட், 2020ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட திட்டுமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஹவாய் தொகுதியிலிருந்து ஜனநாயக கட்சி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் துளசி கபார்ட்(37). இவர் அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. அமெரிக்காவின் சாமோ பகுதியில், ஹவாய் செனட் உறுப்பினராக இருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ தந்தை மைக் கபார்டுக்கும், காகஸ் வம்சாவழிப் பெண்ணான காரல் போர்டருக்கும் மகளாக பிறந்தார். காரல் போர்டர் இந்து மதத்தை போதித்து வருகிறார். அதனால் துளசி கபார்டு தனது டீஜ் ஏன் வயதில் இருந்து இந்து மதத்தை தழுவினார். அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. என்றழைக்கப்படும் இவர், லாஞ்ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ‘மெட்ரானிக்’ என்ற கருத்தரங்கில் பங்கேற்றார். இவரை அறிமுகம் செய்த பிரபல இந்திய-அமெரிக்கர் டாக்டர் சம்பத் சிவாங்கி, 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு போட்டியிடலாம் என கூறினார். அடுத்த அதிபர் தேர்தலில் இவரை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிப்பதற்கான பிரசாரங்கள் இப்போதே தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது.

மூலக்கதை