லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளுக்கு, ‘கிடுக்கிப்பிடி’

தினமலர்  தினமலர்
லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளுக்கு, ‘கிடுக்கிப்பிடி’

புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, லிக்யுட் மியூச்சுவல் பண்டு விதிகளை கடுமையாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், கடன் பத்திர முதலீடு, வட்டி ஆகியவற்றை குறித்த காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தரத் தவறியதால், அதை சார்ந்துள்ள நிதி, கட்டுமான நிறுவனங்கள், நிதிப் பற்றாக்குறையை சந்தித்துள்ளன.
இதையடுத்து, நிதிச் சந்தையில், பணப்புழக்கம் குறைவதை தடுப்பது குறித்து, நேற்று செபி ஆலோசனை குழு கூடி விவாதித்தது.இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளில் திரட்டப்படும் நிதி, அரசு கருவூல பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில், குறுகிய கால அளவில் முதலீடு செய்யப்படுகிறது.இத்திட்டங்களில், விரும்பும் போது முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. அதனால், உள்நாடு அல்லது வெளிநாட்டு காரணிகளால், நிதிச் சந்தை தாக்கத்திற்கு உள்ளாகும் போது, அதிக முதலீடு வெளியேறுகிறது.இது, கடன் பத்திர சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பணப்புழக்க குறைவு, ரூபாய் வெளிமதிப்பு சரிவு போன்ற பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வரம்புஅதனால், லிக்யுட் பண்டு களுக்கு குறுகிய கால முதலீட்டு வரம்பு நிர்ணயிப்பது குறித்து, கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இந்த வரம்பு காலத்திற்குள், முதலீடுகளை திரும்ப எடுக்க முடியாது என்பதால், பணப்புழக்கத்தில் அதிக பாதிப்பு ஏற்படாது.அத்துடன், மியூச்சுவல் பண்டுகள் வெளியிடும், கடன் பத்திரங்களின் சந்தை மதிப்பு வெளியீட்டிற்கான வரம்பை, 60லிருந்து, 30 நாட்களாக குறைப்பது குறித்தும், விவாதிக்கப்பட்டது.இதனால், கடன் பத்திர மதிப்பில் வெளிப்படைத் தன்மையை அறிந்து, அதற்கேற்ப முதலீட்டு திட்டங்களை வகுக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை