நக்சல்களை புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ்: யோகி ஆதித்யநாத் தாக்கு

தினகரன்  தினகரன்
நக்சல்களை புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ்: யோகி ஆதித்யநாத் தாக்கு

சத்தீஸ்கர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தடையாக உள்ளது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் இன்று 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து வருகிறது. வரும் 20-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் துர்க் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், நக்சல்களை வெட்கமே இல்லாமல் புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ் தான் என்று குற்றம் சாட்டினார்.நக்சல் இயக்கத்தை வளர்ப்பதும் ஊழிலில் திளைப்பதும் தான் காங்கிரஸின் கொள்கை என்றும் எப்போதும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது தான் காங்கிரஸின் வேலை என்றார். வாக்கு வங்கி அரசியலில் மட்டும் தான் காங்கிரஸ் ஈடுபாடு காட்டும் என்றும் தேசிய நலனில் அவர்களுக்கு சுத்தமாக அக்கறையில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஒருபுறம் அயோத்தி வழக்கை விசாரிப்பதை 2019நாடாளுமன்றத் தேர்தல் வரை தள்ளிப்போடக் காங்கிரசின் கபில் சிபல் கோரியுள்ளதும் மறுபுறம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்துக் கோவில்களுக்குச் சென்று வருவதும் காங்கிரசின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டுவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அஜித் ஜோகி தலைமையில் காங்கிரஸ் சத்தீஸ்கரில் ஆட்சி புரிந்த போது, ஊழல் அதிகமாக இருந்தது என்றும் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் ரமண் சிங் தலைமையில் பாஜக, ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சத்தீஸ்கர் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது என்றார். சுதந்திரம் கிடைத்த பிறக ஒரு பிரதமர், 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்று பேசுகிறார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான், சத்தீஸ்கரில் பலருக்கு வீடு கிடைத்துள்ளது என்றும் பேசினார்.

மூலக்கதை